2025 நவம்பர் 15, சனிக்கிழமை

செட்டிகுளத்துக்கு தினேஸ் விஜயம்

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இன்று (27), வவுனியா - செட்டிகுளத்தில் உள்ள சமூக விதை வங்கிக்கு விஜயம் செய்தார்.

இதன்போது, சமூக விதை வங்கியின் ஊடாக செட்டிகுளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன், நாட்டின் பசுமை செயற்றிட்டத்துக்காக பங்களிப்பு செய்த பயனாளிகளுக்கு சமூக விதை வங்கியின் ஏற்பாட்டில், சான்றிதழும் பணபரிசும் வழங்கி வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இதேவேளை, பயனாளிகளின் வீடுகளிலும் பயன்தரு மரக்கன்றுகளை நாட்டி வைத்ததுடன், நல்லிண விதைகளும் இதன்போது பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜதாமின குணவர்த்தன, சுரேன் ராகவன், கு. திலீபன், கே. மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X