Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க. அகரன்
வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம்) தெரிவுசெய்யப்பட்டார்.
செட்டிகுளம் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தோல்வியைத் தழுவியிருந்தது. அந்தவகையில் புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறெஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் சு. ஜெகதீஸ்வரனும், சுதந்திரகட்சி சார்பில் ஏற்கனவே தவிசாளராக பதவி வகித்த ஆ. அந்தோணியின் பெயரும் முன்மொழியப்பட்டது.
தெரிவுக்கான வாக்கெடுப்பில் சிவம் 10 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார். அவருக்கு கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்களும் ஈ.பி.ஆர்.எல்.எப் மூன்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி 1, முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரும் வாக்களித்தி்ருந்தனர்.
அந்தோணி6 வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தார்.அவருக்கு அவரது கட்சியின் நான்கு உறுப்பினர்களும்,, ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் வாக்களித்தனர். பொதுஜனபெரமுனவின் ஒரு உறுப்பினர் நடுநிலைமை வகித்திருந்தார்.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளின் பின்னர் செட்டிகுளம் பி்தேச சபையின் புதிய தவிசாளராக சு. ஜெகதீஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டார்.
35 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
43 minute ago