Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
க. அகரன் / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சைட்டத்துக்கு எதிரான மக்கள் அரண் அமைப்பின் ஏற்பாட்டில், யாழில், நேற்று ஆரம்பிக்கப்பட்ட வாகனப் பேரணி வவுனியாவை இன்று வந்தடைந்து, வவுனியாவில் இருந்து அநுராதபுரத்தை நோக்கிய பயணத்தை இன்று ஆரம்பித்தது.
வவுனியா ஏ 9 வீதியில் உள்ள புதிய பஸ் நிலையம் முன்பாக, நேற்றுக் காலை 10 மணிக்கு ஆரம்பித்த குறித்த வாகனப் பேரணி, மன்னார் வீதி வழியாக குருமன்காடு சந்தியை அடைந்து வைரவபுளியங்குளம் ஊடாகச் சென்று வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தியை அடைந்து அங்கிருந்து ஏ9 வீதி வழியாக அநுராதபுரம் நோக்கிச் செல்கின்றது.
தனியார் மருத்துவக் கல்லூரியான சைட்டத்தை நிறுத்து, இலவசக் கல்வியை சிதைக்காதே போன்ற வாசங்களுடன் மோட்டர் சைக்கிள்கள், கார்கள், முச்சக்கர வண்டிகள் என்பன இவ் எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்குபற்றின.
இப்பேரணியில், வைத்தியர் சங்கம், மருத்துவ பீட மாணவர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
14 Jul 2025
14 Jul 2025