Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 ஜூன் 11 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தான் தனிக்காட்டுராஜா தங்களுடைய சொற்களையெல்லாம் கேட்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர் என வட மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா தெரிவித்தார்.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு, கனகராயன்களம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
எங்களுடைய கல்வியின் நிலை தற்போது கீழே தள்ளப்பட்டுள்ளதாக சொல்கின்றார்கள். அதற்கு ஆதாரமாக புள்ளிவிபரங்களை காட்டுகின்றார்கள். ஒரு குடும்பத்தில் எட்டு பிள்ளைகள் இருந்தால் ஒருவர் கடைசிப்பிள்ளையாகத்தான் இருப்பார். நாட்டில் 98 வலயங்கள் இருந்தால் ஏதோவொரு வலயம் கடைசியாகத்தான் வரும்.
எனவே, பல அரசியல்வாதிகள் இதனைப்பற்றி பேசுகின்றார்கள். எல்லோரும் பேசுகின்றார்கள். எனது அரசியல் வாழ்க்கையில் 3 முக்கிய விடயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள். வடக்கில் அவ்வாறுதான் சொல்கின்றார்கள். கிழக்கில் எப்படியென்று தெரியவில்லை.
உலகில் உள்ள பிரதேசங்களிலேயே வட புலத்தில் தான் பத்திரிகைகளுக்கு பூரண சுதந்திரம் உண்டு. நீங்கள் விரும்பினால் ஒப்பிட்டும் பார்க்கலாம். என்ன வேண்டும் என்றாலும் பத்திரிகையில் எவரும் எழுதலாம். எந்த செய்திகளையும் போடலாம். எனவே, மிக சுதந்திரமான நாட்டில் கல்விப் பணியை புரிகின்றோம் என்பதை உணரவேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
43 minute ago
51 minute ago