Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
'வவுனியா மாவட்டத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள கல்நாட்டினகுளம் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சரின் ஊடகப்பரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள கல்நாட்டினகுளம் என்ற கிராமத்தில், 300 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அசாதாரண சூழ்நிலை காரணமாக, 1977களிலும் அதனைத் தொடர்ந்து 1983ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலும், பேரழிவுகளைச் சந்தித்த அக்கிராம மக்கள், தங்களது கிராமத்தை விட்டு முற்றாக வெளியேறினர்.
பின்னர் அவர்கள், அருகிலுள்ள வேப்பங்குளம் மற்றும் கல்நாட்டினகுளத்தின் உட்பகுதியில் குடியேறியுள்ள போதும், எல்லைப் பகுதியிலிலுள்ள பாரம்பரிய பழைய கிராமத்தில் மக்கள் இதுவரை குடியேறவில்லை.
இது தொடர்பாக மத்திய அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சரது கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன், சிதம்பரநகர் நிகழ்வுக்கு கடந்த மாதம் வருகை தந்த அமைச்சரை, மேற்படி கிராமத்துக்கு அழைத்துச் சென்று, மக்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டதுடன் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது. இந்நிலையிலேயே, அவர்களின் மீள்குடியேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்கிராமத்தில் மீள்குடியேறவுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மீள்குடியேற்ற அமைச்சினால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை சமர்பிக்கப்பட்டதும், மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன' என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
28 minute ago
39 minute ago
48 minute ago