2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சீமெந்து பைக்கற்றுக்கள் வழங்கி வைப்பு

George   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

யுத்தத்தின் போது மிகவும் பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மீள்குடியேறிய பின்னர் பல்வேறு தரப்பினராலும் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

இருப்பினும், இன்னும் பலர் வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெறாது உள்ளனர். இவ்வாறு வீடு வழங்கப்பட்டவர்களும் கிடைத்த நிதி போதாமை காரணமாக தமது வீட்டினை கட்டி முடிக்க முடியாத நிலையில் இந்த மக்கள் உள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறு வீட்டுத்திட்ட வேலைகள் நிறைவு பெறாத குடும்பங்களை தெரிவு செய்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இன்றய தினம் சீமெந்து பக்கெற்றுகள் 1,000 வழங்கிவைக்கப்பட்டன.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு தலா 10 சீமெந்து பக்கெற்றுகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர், 5 கட்டமாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 4,530 சீமெந்து பக்கெற்றுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி  அதிகாரசபையின் முல்லைத்தீவு மாவட்ட காரியாலய தொழிநுட்ப உத்தியோகத்தர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற  இந்நிகழ்வில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் நிருத்தனன், தேசிய வீடமைப்பு  அபிவிருத்தி அதிகாரசபையின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் விஜிதகே கமகே, கிராம அலுவலர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .