2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

சேற்றுக்கண்டி அம்பாள் ஆலயத்தில் திருட்டு

Niroshini   / 2017 மே 14 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்,  எஸ்.என்.நிபோஜன் 

கிளிநொச்சி - முரசுமோட்டை, சேற்றுக்கண்டி அம்பாள் ஆலயத்தின் மூலஸ்தானம் மற்றும் களஞ்சியம் அறை  என்பன உடைக்கப்பட்டு, நகை, பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

வழமைபோன்று, சனிக்கிழமை (13) மாலை, ஆலயப் பூசை முடிந்த பின்னர் கதவுகள் பூட்டப்பட்டதாகவும், நேற்றுக் காலை,  பூசைக்காக ஆலயக் கதவை திறந்தபோது, ஆலயத்தின் மூலஸ்தானக் கதவுகள் உடைக்கப்பட்டு, அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாகவும், ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும், களஞ்சிய அறையும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஒரு தொகைப் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும், இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .