2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சி.வி.யை நீக்குமாறு கூறுவதை ஏற்க முடியாது: அடைக்கலநாதன்

Gavitha   / 2015 நவம்பர் 13 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்குமாறு சிலர் தெரிவித்து வரும் கருத்துகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதியே தவிர, தமிழரசுக்கட்சியைச்  சேர்ந்தவர் அல்ல என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று வியாழக்கிழமை (12) தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சரை நீக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வடக்கு முதலமைச்சரை நீக்குமாறு, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன், தமிழரசுக்கட்சிக்கு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

வடக்கு மாகாண முதலமைச்சர், வட மாகாணசபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தமிழ்தேசியக்கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தேர்தலில் போட்டியிட்டாரே தவிர, தமிழரசுக்கட்சி என்ற முத்திரையை குத்திக்கொண்டு தேர்தலில் போட்டியிட வரவில்லை. இந்நிலையில் அவரை ஒரு கட்சிக்குள் கட்டுப்படுத்தி அவரை கலங்கப்படுத்தும் செயற்பாடுகளை சிலர் நிறுத்தவேண்டும்' என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தமிழர் தரப்புக்கு பல்வேறான பிரச்சினைகள் தற்போது காணப்பட்டு வரும் நிலையில் வடக்கு முதலமைச்சரை நீக்குவது கட்சியில் வைத்திருப்பது போன்ற சிறு விடயங்களை வெளியிட்டு தமிழர்கள் முன்னுள்ள பாரிய பிரச்சனைகளை சிறுமையாக்க வேண்டாம் என்பதனையும் கோரி நிற்பதுடன் வடக்கு முதலமைச்சர் தொடர்பான விடயங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் பேசி தீர்ப்பதற்கு வழிவகைகளை தேடாது பகிரங்கமாக பத்திரிகைகளில் அறிக்கை விடுத்து தம்மை பெரியவர்களாக காட்டுவதை நிறுத்தவேண்டும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .