Freelancer / 2022 நவம்பர் 19 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியாவிற்கு இன்று (19) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவிற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஜனாதிபதி மாவட்ட செயலகத்திற்கு அதிகாரிகளை சந்திக்க வருவதனை அறிந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூட முற்பட்ட நிலையில் அவர்களை குறித்த பகுதிக்கு செல்ல விடாது பொலிஸார் தடுத்திருந்தனர்.
இதையடுத்து அங்கு ஒன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அவ்விடத்திலேயே நீதிகேட்டு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து பொலிஸார் பேருந்தொன்றை போராட்டக்காரர்களுக்கு முன்புறமாக நிறுத்தி ஜனாதிபதிக்கு போராட்டம் இடம்பெறுவது தெரியாதவாறு தடுத்தனர்.
இதன்போது பொலிஸாருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு பொலிஸாரை தள்ளியவாறு முன்னோக்கி செல்ல முற்பட்ட போதிலும் அது சாத்தியமின்றி போனது.
இந்த நிலையில் ஜனாதிபதி மாவட்ட செயலகத்தில் இருந்து வெளியேறியதும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை மாவட்ட செயலகத்தின் நுழைவாயில் சென்றடைய அனுமதித்தனர். R



30 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
4 hours ago