Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை பொறுப்பேற்று ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டுமமென, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
கோப்பாய் தொகுதியின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்
தொடரந்துரைத்த அவர், இதை அரசாங்கம் பொறுப்பேற்றால் மட்டும் போதாது, எதிர்காலத்தில் என்ன விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறார்களெனவும் வினவினார்.
நாடாளுமன்றத்தில் தெரிவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டு தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லையெனவும், அவர் தெரிவித்தார்.
அதனை ஜனாதிபதி தன்வசம் வைத்திருப்பதாக, நாங்கள் அறிந்ததாகத் தெரிவித்த அவர், இது தொடர்பில் புலனாய்வு துறையினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனரெனவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு இராஜினாமா செய்து, தற்போது தங்களுக்கு இந்த குற்றச்சாட்டுகள் இல்லை என்ற விதியில், அவர்கள் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்ட ஒரு சூழ்நிலையும் உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கமே அந்த தவறுகளை விட்டது என்றார்.
எனவே அரசாங்கம் இந்த பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு பதவி விலக வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகுமெனவும் இதற்கான தீர்வை அவர்கள் சொல்வார்கள் என்று நான் நினைப்பதாகவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .