Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2020 ஒக்டோபர் 11 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்
ஜெயபுரம் மக்களுக்கான 100 ஏக்கர் காணி, இன்று (11) விடுவிக்கப்பட்டது. ஜெயபுரம் மக்களால் 520 ஏக்கர் காணி கோரப்பட்டு வந்த நிலையில், அதில் 100 ஏக்கர் காணி, பூநகரி பிரதேச செயலகம் ஊடாக அப்பகுதி மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
1980ஆம் ஆண்டில், குறித்த பகுதியில் மக்கள் குடியேற்றப்பட்டனர். இதன்போது அவர்களுக்கு தலா 1 ஏக்கர் வயற்காணி வழங்குவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக, அக்காணியை மக்களால் பராமரிக்க முடியாமற்போனதால், அக்காணிகள் பற்றை காடுகளாக மாற்றம் பெற்றன.
அதையடுத்து, குறித்த காணியில் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு, வனவள பாதுகாப்பு திணைக்களம் தடை விதித்திருந்தது.
இவ்வாறான நிலையில், மக்களால் பல்வேறு தரப்பிடமும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, 100 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago