Freelancer / 2022 மார்ச் 03 , மு.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
றொசேரியன் லெம்பட்
மலேசியாவில் மரணமடைந்த தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ் மரணம் தொடர்பிலான உண்மை தன்மையை கண்டறிவதற்கு விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் .ஜீ.எல். பீரிஸூக்கு கடிதமொன்றையும் நேற்று (02) அனுப்பிவைத்துள்ளார்.
மன்னார் பனங்கட்டு கொட்டு கிழக்கைச் சேர்ந்த தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ். இவர் 2018 முதல் இன்று வரை இலங்கையின் தேசிய கால்பந்து அணி வீரராக இருந்து வருகிறார்.
தனது மாவட்டத்திற்கும், தாய் நாட்டிற்கு புகழை தேடித் தந்தவர். தன்னை முழுவதுமாக கால் பந்துக்காக அர்ப்பணித்த வீரன்.
அவருடைய விளையாட்டு திறமையின் நிமித்தம் மாலைதீவுக்கு வலன்சியா விளையாட்டு கழகத்தினரால் அழைக்கப்பட்டு அந்த கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி அங்கும் பல சாதனைகள் படைத்து பல வெற்றிக்கு வழி வகுத்தவர்.
இவ்வாறானதோர் சிறந்த விளையாட்டு வீரனின் (26.02.2022) அகால மரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மரணம் கொலையா? என்ற சந்தேகத்தையும் எல்லோர் மட்டிலும் எழுப்பியுள்ளது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
3 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Jan 2026