Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 பெப்ரவரி 15 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
“முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெயர்ந்து வாழ்ந்த எமக்கு, வீடுகளை வழங்க முடியாதென அரசாங்கம் தெரிவித்து வருவதாக” கருநாட்டுக்கேணி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி தென்னமரவாடி, போன்ற கிராமங்களில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழர்கள் 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், யுத்தம் நிறைவடைந்து 2011 ஆம் ஆண்டின் பின்னர் மீள்குடியேற்றப்பட்டனர். எனினும் மீள்குடியேறிய குடும்பங்களில் அதிகளவான குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால் தற்காலிக வீடுகளில் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இது தொடர்பாக அம்மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் எங்களுடைய கிராமத்தில் வீடு, சகல வசதிகளுடன் வாழ்ந்து வந்தோம். அப்போது, அரசாங்கம், எங்களை வலுக்கட்டாயமாக இங்கிருந்து விரட்டியடித்தார்கள். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நாங்கள் எமது ஊருக்கு வருகின்ற போது எல்லாமே அழிக்கப்பட்டு காடுகளாகவே காணப்பட்டன. எனினும் நாங்கள் மீள்குடியேறியிருக்கின்றோம். ஆனால், எங்களுக்கு வீட்டுத்திட்டங்களை தர மறுக்கின்றார்கள்.
பயனாளிகளைத் தெரிவு செய்யும் போது மேற்கொள்ளப்படும் புள்ளியிடல் முறையில், நாம் அதுக்கான தகுதிகளைக் கொண்டிருக்கவில்லையென தட்டிக்கழிக்கின்றார்கள்.
யுத்தத்தால் உறவுகள், அவயங்களை இழந்து வறுமையில் வாடும் எமக்கு உதவிகள் அற்ற நிலைகள் காணப்படுகின்றன” என தெரிவித்தனர்.
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago