Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 மே 27 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றம் உள்ளூராட்சி மன்ற சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குமாறு கேட்டுக்கொண்ட அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம், அவர்களுக்கான விசேட கொடுப்பனவையும் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
கிளிநொச்சி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, குறித்த சங்கத்தின் வடமாகாண இணை தலைவர் ஆறுமுகம் புண்ணியமூர்த்தி, இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கு - கிழக்கில், 2,000க்கு மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் இல்லாது சேவையில் ஈடுபடுகின்றனரென்றும் அவர்கள் அனைவரும் உள்ளூராட்சி மன்றங்களில் பணியாளர்களாக 3 ஆண்டுகளுக்க மேல் சேவையில் ஈடுபட்டு வருகின்றனரென்றும் கூறினார்.
தற்போதைய கொவிட் - 19 அச்சுறுத்தல் நிறைந்த சூழலிலும், அவர்கள் தமது சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனரெனவும் இந்த நிலையில் அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பூசியை அவர்களுக்கு வழங்க முன்வர வேண்டுமென்றும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அவர்களது குடும்பங்களுக்கும் கொரோனா தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், அத்துடன், அவர்களுக்கான நிரந்தர நியமனத்தையும் வழங்க வேண்டுமென்றார்.
மேலும், இச்சூழ்நிலையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு, விசேட கொடுப்பனவையும் வழங்க முன்வர வேண்டுமென்றும், ஆறுமுகம் புண்ணியமூர்த்தி கேட்டுக்கொண்டார்.
3 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago