Niroshini / 2021 ஜனவரி 27 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன்
தடைகளை உடைத்தெறிந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், இன்று (27) காலை குருந்தூர்மலைக்குச் சென்று, அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், வழிபாடுகளையும் மேற்கொண்டனர்.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேளமாளிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், பிரதேச சபை உறுப்பினர்களான சிலோகேஸ்வரன், த.றமேஷ், ச.ஜீவராசா உள்ளிட்ட குழுவினரே, இவ்வாறு, இன்று (27) காலை, குருந்தூர் மலைக்குச் சென்றுள்ளனர்.
இதேவேளை, அங்கிருந்த இராணுவத்தினர், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சென்ற வாகன இலங்கங்களைப் பதிவு செய்து அச்சுறுத்தும் வகையில் செயற்றபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago