Niroshini / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், கொரோனா தனிமைப்படுத்தலுக்குட்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படாமையால், அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம், வவுனியா - திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த குடும்பத்துடன் தொடர்புகளை பேணிய பலர், திருநாவற்குளம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு 6 நாள்கள் கடந்துள்ள நிலையில், அவர்களுக்கு எந்தவிதமான நிவாரண உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை.
இதேவேளை, கற்குழியில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மாணவியுடன் தொடர்பை பேணியதாகக் கூறப்படும் பூந்தோடம் - ஸ்ரீநகர் கிராமத்தில் உள்ள சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கும் எந்தவித நிவாரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை.
கூலித்தொழிலை நம்பி இருக்கும் குறித்த குடும்பங்கள், தனிமைப்படுத்தல் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான உதவிகளை அதிகாரிகள் வழங்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 minute ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
14 Nov 2025