Niroshini / 2021 ஜூன் 08 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - ஓமந்தை, பனிக்கன், நீராவிப் பகுதியில், இன்று (08) அதிகாலை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்களை அழைத்துச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திம்ரும்பிய பயணிகளை அழைத்துக் கொண்டு கிளிநொச்சி - பூனநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த போதே, பனிக்கன் - நீராவிப் பகுதியில், வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தப் பஸ்ஸில், 7 பேர் பயணம் செய்த நிலையில், எவருக்கும் காயங்கள் ஏற்பபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக, ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
9 hours ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago
14 Nov 2025