Editorial / 2020 ஒக்டோபர் 01 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் – நீர்வேலி சந்திக்கு அண்மையில், நேற்று (30) இரவு 8 மணியளவில், வீடொன்றுக்குள் வன்முறைக் கும்பலொன்று மேற்கொண்ட வாள்வெட்டு அட்காசத்தில், பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பு.சிவா (வயது -30), அவரது தாயார் ரேணுகா (வயது -50) ஆகயோர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அடங்கிய கும்பலே, இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
மேலும் வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களும் அடித்து, தீயிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
வாள் வெட்டுக்கு இலக்கான நபர், "தனு ரொக்" எனும் வாள் வெட்டுக்குழுவின் தலைவரான தனு என்பவரின் நெருங்கிய சகா என விசாரணைகளில் தெரியவந்துள்ளதென, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago