2025 மே 16, வெள்ளிக்கிழமை

தமிழரசின் மத்தியக் குழு வவுனியாவில் கூடுகிறது

Editorial   / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், வவுனியா, குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில் இம்மாதம் 29ஆம் திகதி கூடவுள்ளது.

இக்கூட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உட்பட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இக்கூட்டத்தில், முக்கிய விடயங்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நியமிப்பு, நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு, எதிர்க்காலத்தில் கட்சியை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிவகைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.  

இணையத்தளங்கள், ஊடகங்களில் வெளியான கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும், உறுப்பினர்களுக்கும் எதிரான பிரசாரங்களும் செயற்பாடுகளும் குறித்தும் ஆராயப்படவுள்ளன.

மேலும், தேர்தல் காலத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு  கலந்துரையாடப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .