2025 மே 20, செவ்வாய்க்கிழமை

’தமிழர்களுக்கான விடுதலை இதுவரை கிடைக்கவில்லை’

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இலங்கையில் போர் குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளிலும் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கான விடுதலை இதுவரை கிடைக்கவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார் 

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தங்களது  உரிமைக்களுக்காக போராடி வருகின்றார்கள்.  அந்த கொள்கையின்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவை வழங்கி வருகின்றனர்

அதாவது, மக்களுடைய சுயநிர்ணய உரிமை அவர்களுடைய விடுதலை என்பவற்றை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து  குரல் கொடுத்து வருகின்றோம்.  அந்த வகையில் மக்கள் தங்களுக்கான ஆதரவை வழங்கி வருகின்றார்கள் நாங்களும் எங்களுடைய கொள்கைக்காக குரல் கொடுத்து வருகிறோம். 

எமது மக்களைக் கொன்று குவித்து பெரும் மனிதப் படுகொலைகளை செய்தவர்கள், இன்று உயர் பதவிகளில் உயர் பதவிகளை வகிக்கின்றார்கள். ஜனாதிபதியாக வருவதற்கு போட்டியிடுகின்றார்கள். ஆனால், நமது மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட இதுவரை வழங்கப்படவில்லை. அதற்காக நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம்.

கடந்த காலங்களில் தேர்தலின் போதும், நாங்கள் இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அதேநேரம், இந்த எமது உரிமை உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் ஒரு தன்னாட்சியுடன் வாழக்கூடிய ஒரு அதிகாரத்துக்காகவும் நாங்கள் போராடி வருகின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X