Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
க. அகரன் / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனநாயக ரீதியாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் அழுத்தம் கொடுக்கும் வகையிலும் புதிய அமைப்பொன்று உதயமாகியுள்ளது.
வவுனியா இந்திரன் விருந்தினர் விடுதியில், நேற்று (11) மாலை நடைபெற்ற பொது அமைப்புகளுடனான கலந்துரையாடலின்போதே, வவுனியா வெகுஜன போராட்ட ஒருங்கமைப்புக் குழு என்ற குறித்த புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பில், 17 பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தற்போது அங்கத்துவம் பெற்றுள்ளனர். மேலும் பல அமைப்புகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த அமைப்பின் ஏற்பாட்டிலேயே, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வவுனியாவில், கடந்த திங்கட்கிழமை (09) போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தொடர் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்கும் வகையிலேயே, பொது அமைப்புகள் இணைந்து இப்புதிய அமைப்பை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago