Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 14 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் கிடைத்தும் மீதிப்பணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் கட்டிய அரைகுறை வீட்டினை நம்பி தற்காலிக வீடுகளில் வாழும் மக்கள் தற்போது பருவமழையினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் சுமார் 1600 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கிவைக்கப்பட்ட போதும், அது வெறும் அத்திவாரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து அந்த மக்களுக்கான மீதிப்பணம் கிடைக்காத நிலையில் தற்போதும் மக்கள் தற்காலிக கொட்டில்களில் மழைவெள்ளத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் உள்ள மயில் குஞ்சன் குடியிருப்பில் வாழ்ந்து வரும் மக்களே இவ்வாறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
2 hours ago