2025 மே 23, வெள்ளிக்கிழமை

தலைகீழாக ஏற்றப்பட்ட கொடி

Editorial   / 2019 ஏப்ரல் 20 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில், இலங்கை தமிழரசுக்கட்சியின் தேசிய மட்ட இளைஞரணி நிர்வாகத் தெரிவு இன்று இடம்பெற்றபோ,து தமிழரசுக் கட்சியின் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டமையால் சிறு குழப்பம் ஏற்பட்டது.

இளைஞரணி நிர்வாகத் தெரிவு இடம்பெறுவதற்கு முன்னர், கட்சியின் கொடி ஏற்றுவதற்காக அனைவரும் நிகழ்வு இடம்பெற்ற வவுனியா நகரசபையின் மண்டபத்துக்கு முன்பாக கூடியிருந்த நிலையில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவால் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

ஏற்றப்பட்ட சில நொடிகளில் கட்சியின் கொடி தலைகீழாக காணப்பட்டமை மாவை சேனாதிராஜாவால் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் கொடி இறக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அவ்விடத்துக்கு வந்து கொடியை சீர்செய்து கொடுத்திருந்த நிலையில் மீண்டும் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X