Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்
ஜனநாயக மரபை மீறி, மக்கள் பிரதிநிதியை சபையில் அவமதித்து மக்களுக்கு எதிராகச் செயற்பட்டமையைக் கண்டித்து, பூநகரிப் பிரதேச சபைத் தவிசாளர் அருணாசலம் ஐயம்பிள்ளைக்கு எதிராக, பூநகரியில் இன்று (19) ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பூநகரி பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கரைச்சி, கண்டாவளை, பளை பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பூநகரி பிரதேச சபையில், வௌ்ளிக்கிழமை (14) நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தின் போது, சபையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, தவிசாளர் ஐயம்பிள்ளை, சபையை ஒத்திவைத்து சபையில் இருந்து வௌியேறினார்.
இதன்போது, சபையில் வெளியேறி செல்லும் போது, “வாயை மூடிக்கொண்டு வெளியே போ” என்று, உறுப்பினர் யோன்பின்ரன் மேரிடென்சியாவுக்கு தவிசாளர் அச்சுறுத்தும் வகையில் கட்டளையிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அ. ஜயம்பிள்ளையிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
அவ்வாறு நடந்துகொள்வில்லையென்றும் சபையில் அமைதியின்மை ஏற்படுவதைத் தடுக்கவே இரண்டு உறுப்பினர்களை வெளியேறுமாறு அறிவித்ததாகவும் வெர் தெரிவித்தார்.
அத்தடன், தான் கட்சி சார்ந்து சபையைக் கொண்டு செல்லவில்லையென, அவர் மேலும் கூறினார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago