Editorial / 2020 நவம்பர் 19 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இன்று (19) மதியம் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த கென்டர் ரக வாகனம், தாண்டிக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வேககட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றதாக, வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சிக்கியுள்ளார் எனவும் அவர் உட்பட கென்டரிவ் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago