2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தான்தோன்றீஸ்வரர் கோவில் திருவிழா: ’சிறிய தேரை இழுப்பதெனத் தீர்மானம்’

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

 

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் வருடாந்த திருவிழாவுக்கு, இம்முறை 100 பேருக்கு மாத்திரமே, அனுமதி வழங்கப்படுமெனத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், தேர்த் திருவிழாவின் போது, குறைந்த ஆட்களை வைத்துக்கொண்டு சிறிய தேரை இழுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் திருவிழா தொடர்பான ஊடக சந்திப்பொன்று, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், இன்று (17) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் திருவிழா ஜூன் 19ஆம் திகதியன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, 16 நாள்கள் திருவிழா நடைபெறுமென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .