Freelancer / 2022 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - தர்மபுரம், வட்டக்கச்சி பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 4 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.
வட்டக்கச்சி - ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் திருப்பணி அபிவிருத்தி வேலைக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கேடர்கள் ஐந்தை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும், இராமநாதபுரம் பகுதியில் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான பசு மாட்டினை திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே பகுதியில் தண்ணீர் இறைக்கும் நீர் பம்பிகை திருடிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபரும், வட்டக்கச்சி கல்மடு பகுதியில் நான்கு துவிச்சக்கரவண்டிகளை திருடிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (R)
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago