Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூன் 13 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவுக்கு, இம்முறை மன்னார் மறைமாவட்டத்தை தவிர்ந்த ஏனைய வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தருவதற்கு அனுமதி இல்லையென, மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
மேலும், 'வெளியில் இருந்து தேவாலயத்துக்கு வருகின்றவர்கள், மடு சந்தியில் வைத்து அன்டிஜன் பரிசோதனைக்கு உற்படுத்தப்படுவார்கள். அதன் பின்னரே தேவாலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்' என்றும், அவர் கூறினார்.
மன்னார் ஆயர் இல்லத்தில், நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், ஜுலை 2ஆம் திகதியன்று, மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் ஜுன் 23ஆம் திகதியன்று மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெறவுள்ளதென்றார்.
அதனைத் தொடர்ந்து, நவ நாள் திருப்பலிகளும் இடம்பெறுமெனத் தெரிவித்த அவர், ஆனால் குறித்த நவ நாள் திருப்பலிகளுக்கு 15 நபர்கள் மாத்திரமே கலந்துகொள்ள முடியுமெனவும் கூறினார்.
'அதன் பின்னர், ஜுலை 2ஆம் திகதி காலை, திருவிழா திருப்பலி திருத்தலத்தின் முன் பக்கத்தில் இருக்கும் இடத்தில் இருந்து திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
'திருப்பலியைத் தொடர்ந்து, திருச் சொரூப ஆசீர் வாதமும் வழங்கப்படும். ஆனால் நாங்கள் அன்றைய தினம் அதிகமான திருப்பலிகளை நடத்தினாலும், ஒவ்வொரு திருப்பலிகளுக்கும் ஆகக்கூடியது 30 பேர் மாத்திரமே பங்குகொள்ள முடியும்' என்றும், அவர் கூறினார்.
திருவிழா திருப்பலி, தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுமெனத் தெரிவித்த ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, 'திருப்பலியை தொடர்ந்து மேலும் 5 திருப்பலிகள் அன்றைய தினம் இடம் பெறும். அதற்கு மன்னார் மறைமாவட்டத்தில் வெள்வேறு மறைக்கோட்டத்திலும் இருந்து மக்களை அழைத்து வருவார்கள்' என்றார்.
52 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
57 minute ago
1 hours ago