2025 மே 16, வெள்ளிக்கிழமை

திறப்பு விழா

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்ட வடமாகாண ஆளுநர், 123 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வடக்கு மாகான முகாமைத்துவ பயிற்சி அலகினைத் திறந்து வைத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் வகையில் கிளிநொச்சி  கனகபுரம் பகுதியில் சுமார் 123 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப் பெற்ற  முகாமைத்துவ பயிற்சி அலகு இன்று (25) பகல் 10 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர், மாவட்டச் செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .