Niroshini / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலையின் அனைத்து திறப்புகளையும், வலயக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிப்பதற்கு, பாராளுமன்ற உறுப்பினர் க. திலீபனுக்கு எந்த அதிகாரமும் இல்லையென, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தலைவர் நேசராஜா தெரிவித்தார்.
புறக்கணிக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை திறப்புகளை வலயக் கல்வித் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு, திலீபன் எம்.பி தெரித்துள்ள நிலையில், அது தொடர்பில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தலைவர் நேசராஜாவிடம் கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அதிபர் - ஆசிரியர்கள் தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனவும் இது தொழிற்சங்கப் போராட்டம் எனவும் இந்நிலையில், அதிபர்களிடம் திறப்புகளை ஒப்படைக்குமாறு எவரும் கேட்க முடியாது எனவும் கூறினார்.
அவ்வாறான ஒரு தேவை இருப்பின், மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஊடாக அறிவுறுத்தல் கிடைக்க வேண்டுமெனத் தெரிவித்த நேசராஜா, "வெறுமனே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கட்டளையிட முடியாது. எனவே, பாராளுமன்ற உறுப்பினருக்கு திறப்பை ஒப்படைக்க கூற எந்த அதிகாரமும் இல்லை" எனவும் கூறினார்.
34 minute ago
40 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
40 minute ago
49 minute ago