Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தீர்த்தமாடச் சென்ற இளைஞன் ஒருவர், தாமரைக் கொடியில் சிக்குண்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், வவுனியா - ஈச்சங்குளத்தில், இன்று (02) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞன், ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த ரட்னநாதன் துஷ்யந்தன் (வயது 27) என, ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஈச்சங்குளம் பிள்ளையார் கோவில் பிள்ளையார்க் கதைத் தீர்த்தமாடல் நிகழ்வு, இன்று (02) நடைபெற்றது.
இதன்போது, வழமைபோல ஊர் மக்கள் கூடித் தீர்த்தமாடச் சென்ற வேளையிலேயே, குறித்த இளைஞன் தாமரைக் கொடியில் சிக்குண்டு, நீரில் மூழ்கியுள்ளார்.
இதையடுத்து, ஊர் மக்கள் கூடி, குறித்த இளைஞனை மீட்டு, வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .