Editorial / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை வழங்குவது தொடர்பில், கடந்தாண்டு ஏப்ரல் 4ஆம் திகதியன்று நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு, துறைசார்ந்த அமைச்சருக்கு பிரமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக, முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், இன்று (07) தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வவுனியாவில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் கடைகளை வழங்கும்போது, வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்று, கடந்த வருடம் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
எனினும், இந்தத் தீர்மானத்துக்கு முரணாக, நிர்மாணிக்கப்பட்டு கடைகளை வழங்குவது தொடர்பில், கடந்த வாரம் திறந்த கேள்வி கோரப்பட்டிருந்ததாகத் தெரிவித்த இவர், இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தன்னிடம் முறைப்பாடு செய்ததற்கமைய, இது தொடர்பில், பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டாகவும் கூறினார்.
இதையடுத்து, இது தொடர்பில் கவனஞ்செலுத்திய பிரதமர், நேற்று (06) துறைசார்ந்த அமைச்சருக்கு, இது தொடர்பில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்ததாக, அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago