Editorial / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொசேரியன் லெம்பட்
யாழ்.தீவகப் பகுதிகளில் வறுமைக் கோட்டின் கீழுள்ள மற்றும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கான இடர் கால உலருணவுப் பொதிகள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் சனிக்கிழமை (23) வழங்கி வைக்கப்பட்டன
தீவு பகுதியில் உள்ள பிரதேச செயலாளர் ,கிராம சேவையாளர்கள், சமூக பணியாளர்களுடன் இணைந்து அல்லைப்பிட்டி ,மண்டைதீவு ,புங்குடுதீவு, வேலணை ,சரவணை, நயினாதீவு, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு போன்ற பகுதிகளுக்கு அங்குள்ள கிராம சேவையாளர்களால் தெரிவு செய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு தலா 3,350 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
நாட்டில் தற்போது நிலவி வருகின்ற உணவுத் தட்டுப்பாடு, உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மற்றும் பெண் தலைமைத்துவங்களை கொண்ட குடும்பங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளன.
இதனை கருத்தில் கொண்டு மன்னார் ,வவுனியா ,முல்லைத்தீவு ,போன்ற மாவட்டங்களுக்கு நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நேரத்தில் தீவக மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண பணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago