Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
துணுக்காய் பிரதேசத்தில் சுமார் இரண்டாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு, கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில், பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புத்துவெட்டுவான், கொக்காவில், முதிரைச்சோலை போன்ற பகுதிகளில், சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கும் அதிகமான பகுதிகளில் பெறுமதிவாய்ந்த காடுகள் அழிக்கப்பட்டு, கிரவல் மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனைவிட, இந்தப் பகுதிகளில் தற்போதும் கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முன்னர் வளமான சமதரைகளாகவும் சோலையாகவும் காணப்பட்ட இந்தப் பகுதிகள், இன்று பல ஆயிரம் ஏக்கர் வரையான பகுதிகள் காடுகள் அழிக்கப்பட்டு கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாரிய குன்றும் குழியுமாகவும் காணப்படுகின்றது.
ஆரோக்கியபுரம் பகுதிகளிலும் இவ்வாறான நிலைமை காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
3 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago