2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

துண்டுப்பிரசுரம்: ‘அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது’

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியில், கடந்த வாரம் மீட்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டிருந்த துண்டுப்பிரசுரமானது, முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளனவென, ஜனநாயகப் போராளிகளின் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி, இன்று (03) தெரிவித்தார்.

இது குறித்து தொடந்துரைத்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி சர்வதேச மட்டத்திலும் இலங்கைக்குள்ளும் ஏற்படுத்தப்படுகின்ற இந்த அநாவசியப் பிரச்சினைகள், மிக நீண்டகால அடிப்படையிலேயே மென்மேலும் இலங்கையை ஒரு பாரிய நெருக்கடிக்குள் தள்ளுமெனவும் குறிப்பிட்டார்.

எனவே, புலனாய்வுத்துறை, சட்டத்துறை, நீதித்துறை இருக்கின்ற நிலைமையில், இந்த வதந்திகளுக்குப் பின்னணியிலிருப்பவர்களை இனங்காண்பது மிக இலகுவான விடயமெனத் தெரிவித்த அவர், இங்கு நடைபெறுகின்ற ஒவ்வொரு சம்பவங்களையும் மிக ஆழமாக ஆராய்ந்து இலங்கையை மதிப்பு மிகுந்த நாடாக ஒரு சுதந்திர நாடாக கொண்டு செல்லப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையொகுமெனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .