Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
வவுனியா மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமான துவரங்குளத்துக்கு பஸ் சேவையை ஏற்படுத்தித்தருமாறு, வவுனியா - நொச்சிமோட்டை கிராம அலுவலர் பிரிவிலுள்ள துவரங்குளத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில், தொடர்ந்து கருத்துரைத்த அவர்கள், 2010ஆம் ஆண்டு மீள்குடியமர்த்தப்பட்ட தாங்கள் சீரான போக்குவரத்து இன்மை. தமது பிள்ளைகளுக்கான முன்பள்ளி தேவை என்பவற்றை வலியுறுத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
நொச்சிமோட்டைப் பகுதியிலிருந்து 3 கிலோமீற்றர் தூரத்திலுள்ள துவரங்குளம் பகுதியில், 25 தொடக்கம் 30 வரையான குடும்பங்கள் வசித்து வருகின்றோம். எமது ஜீவனோபாயமாக கூலித்தொழிலையே மேற்கொண்டு வருகின்றோம்.
பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், போன்ற இதர தேவைகளின் நிமித்தம் வவுனியா நகருக்கே செல்லவேண்டிய தேவையும் ஏற்படுகின்றது.
முதன்மைச்சாலையான ஏ-9 சாலையிலிருந்து 3 கிலோமீற்றர் நடந்தும் ஏனைய வாகனங்களிலும் எமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
எமது நிலை தொடர்பாக, மக்கள் பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுபோதும் எமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
57 minute ago
1 hours ago