2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘தெரிவுசெய்யப்பட்டவருக்கு நியமனம் வழங்க வேண்டும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி – கண்டாவளை, முரசுமோட்டைக் கிராமத்தின் சமாதான நீதவானாக தெரிவு செய்யப்பட உள்ள நபருக்கு குறித்த பதவியினை வழங்க வேண்டாம் என முரசுமோட்டைக் கிராமத்தின் பொதுமக்கள், பொது அமைப்புகள் நீதியமைச்சின் செயலாளருக்கு மனு அனுப்பி வைத்துள்ளனர்.

அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது கிராமத்துக்கான சமாதான நீதவானாக நியமனம் வழங்கவிருப்பது, சிறப்பற்ற ஒன்றாகும். இதற்கு தெரிவு செய்யப்பட்ட நபர் குறித்த பதவிக்குப் பொருத்தமற்றவர்.

குறித்த நபரின் செயற்பாடுகள் மக்கள் விரோதமானதாகும். மக்களுக்காக பணியாற்ற வேண்டிய தனது பதவியைப்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றுவதும் பொலிசில் வழக்குகள் தொடர்வதும் மக்களை அலைய வைப்பதும் இவரின் வாடிக்கையாகும். சமாதான நீதவானாக நியமிக்கப்படுபவர்.

எமது கிராமத்தில் மதிப்பிற்குரியவராகவும் பொது அமைப்புகளில் அங்கம் வகிப்பவராகவும் பொதுச் சேவைகளில் ஈடுபடுபவராகவும் சிறந்த பண்புகளை உடையவராகவும் இருக்க வேண்டும். ஆனால் குறித்த நபர் இப்பண்புகள் சிறிதளவும் இல்லாதவர். மக்களின் வெறுப்புக்குரியவராகவே இருந்து வருகின்றார்.

எனவே தயவு செய்து தாங்கள் எங்களின் இந்த அதிருப்தியைப் புரிந்து கொண்டு, இவருக்கு வழங்க இருக்கும் சமாதான நீதவான் நியமனத்தை இரத்துச் செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .