Niroshini / 2021 மே 05 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - கண்ணகைபுரம், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில், சந்தைப்படுத்த முடியாமல் தேங்கியிருந்த சுமார் 75,000 கிலோகிராம் பூசணிக்காயை விற்பனை செய்வதற்கு, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது.
வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் கலந்துரையாடி, இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைய, இதன் முதற்கட்டமாக 50,000 கிலோகிராம் பூசணிக்காயை கொழும்பு மெனிங் சந்தைக்கு எடுத்துச்செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக முப்படையினருக்குமான உணவுப்பொருள் கொள்வனவில் ஈடுபடும் தனியார் நிறுவனமொன்றுக்கும் ஒரு தொகுதி பூசணிக்காயை விற்பனை செய்வதற்கும், கோ.றுஷாங்கன் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025