2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தேராவில் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

Niroshini   / 2020 நவம்பர் 16 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

விசுவமடு - தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்புரவு பணி, இன்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது, தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழு உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள் ஆகியோர் இணைந்து, அஞ்சலி செலுத்தி, சிரமதானப் பணிகளை முன்னெடுத்தனர்.

இதன்போது சம்பவ இடத்துக்கு வருகை தந்த தர்மபுரம் பொலிஸார், இராணுவத்தினர், இராணுவப் புலனாய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த குழுவினரை அழைத்து வாக்குமூலங்கள் பெற்றனர்.

குறித்த இடத்தில் சிரமதானப் பணிகளை முன்னெடுப்பதற்கு, உரிய பிரதேச சபையின் அனுமதியை பெற்று, சுகாதார நடைமுறைகளுக்கு அமையவே, குறித்த சிரமதானப் பணிகளை முன்னெடுத்ததாக, அக்கழுவினர் கூறினர்.

மேலும், இம்முறையும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் சுகாதார நடைமுறைகளை பேணி, இந்நிகழ்வை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும், குழுவினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X