2025 மே 22, வியாழக்கிழமை

தேவிபுரத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - தேவிபுரம் பிரதேசத்தில் அதிகரித்துக் காணப்படுகின்ற சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனைகள், போதைப்பொருள் என்பவற்றால் சிறுவர் துஷ்பிரயோகங்கள், குடும்ப வன்முறைகள் அதிகரித்துக் காணப்படுவதாக, கிராம மடட்ட அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில், கசிப்பு உற்பத்தி விற்பனைகள் கஞ்சா பயன்பாடு என்பன அதிகளவில் காணப்படுவதுடன், இதனால் இக்கிராமத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன எனச் சுட்டிக்காடடப்பட்டுள்ளது.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளால் சிறுவர் துஷ்பிரயோகங்கள் இளவயது  கர்ப்பம் தரித்தல் இளவயதுத் திருமணங்கள், குடும்ப வன்முறைகள் என்பன அதிகரித்துக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளன.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்துடன் நெருக்கிய தொடர்புகளைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

இதனால் இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்படட தரப்புகள் எந்தவிதமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .