Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூன் 09 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் தரமுயர்த்தப்பட்டமையானது, தமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகுமென, பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், தரமுயத்தப்பட்டு, இலங்கை வவுனியா பல்கலைக்கழகமென அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரீஸ் அவர்களின் கையொப்பத்துடன் இன்று (08) வெளியிடப்பட்டுள்ளதென்றார்.
இதன்படி, 'யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம்' என்ற பெயர் எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் 'வவுனியா பல்கலைக்கழகம்' என அழைக்கப்படுமெனத் தெரிவித்த அவர், இது தமது தொடர் முயற்சிக்கு கிடைத்த அளப்பரிய வெற்றியாகுமென்றும் கூறினார்.
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்த்த வேண்டுமெனும் தூரநோக்கோடு செயற்பட்ட போது, தனது தொடர் முயற்சிக்கு பக்கபலமாக இருந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாகத் தெரிவித்தார்.
அத்துடன், 'ஓகஸ்ட் 1ஆம் திகதிக்கு பின்னர் வவுனியா பல்கலைக்கழகமானது, தெரிவுசெய்யப்பட்ட கற்கை நெறிகளில் விசேடத்துவத்தை அபிவிருத்தி செய்யும் இயல்திறனுடன் திடமான ஒரு அடிப்படையை கொண்ட கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்: என்றும், காதர் மஸ்தான் கூறினார்.
14 minute ago
18 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
24 minute ago