Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
கொரோனா தொற்றாளர்களை பராமரிப்பதற்கு, தொற்றாளர்கள் விடுதிக்குள் செல்வதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில், வவுனியா வைத்தியசாலையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், வைத்தியசாலையின் தொற்றாளர் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், உறவினர்கள் எவரும் அருகில் இருந்து பராமரிக்க அனுமதிக்கப்படாமையால், தொற்றாளர்களும் உறவினர்களும்அதிகளவான மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சுகாதார அமைச்சு இலங்கையில் முதற்கட்டமாக, வவுனியா மற்றும் மொனராகலை வைத்தியசாலைகளில் கொரனா நோயாளர்களை பராமரிப்பதற்கு உறவினர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி க. ராகுலனிடம் வினவியபோது,
வவுனியா வைத்தியசாலைக்கும் குறித்த நடைமுறைமேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பதிலளித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், இதற்கமைய, எதிர்வரும் 1ஆம் திகதியில் இருந்து இந்த நடைமுறையை ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறினார்.
'அதன்படி, தொற்றாளர்களின் உறவினர்களுக்கு ஒருமணி நேரப் பயிற்சி வழங்கப்பட்டதன் பின்னர், கொரோனா விடுதிக்குள் செல்வதற்கான பாதுகாப்பு அங்கிகள் முழுமையாக அணிந்து செல்ல அனுமதிக்கப்படுவர்.
'அத்துடன், அனைத்து தொற்றாளர்களின் உறவினர்களையும் ஒரே தடவையில் அனுமதிக்க முடியாது. ஒரே தடவையில் மூவர் என்ற ரீதியில் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் அனைத்து தொற்றாளர்களுக்கும் உதவும் வகையில் விடுதிக்குள் செல்வார்கள்.
'இதனை ஒரு பொறிமுறையின் கீழ் செயற்படுத்த திட்டமிட்டுள்ளோம்' எனவும், ராகுலன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .