Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி, வவுனியா மாவட்ட பொது அமைப்புகளினால், இன்று புதன்கிழமை (12) ஊர்வலமொன்று நடத்தப்பட்டது.
வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக ஆரம்பமான
இந்த ஊர்வலம், ஏ-9 வீதி வழியாக வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்தது, அங்கு, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மகஜரொன்றும் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இவ் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள், வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் சில நிமிடங்கள் கூடி, 'தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கு, ஏமாற்றாதே ஏமாற்றதாதே தொழிலாளர்களை ஏமாற்றாதே, வெல்லட்டும் வெல்லட்டும் தோட்டத் தொழிலாளர் போராட்டம், வெல்லட்டும் வெல்லட்டும் உரிமைக்கான போராட்டம், வெல்லட்டும் வெல்லட்டும் உழைப்புக்கான போராட்டம்;, வேலைகொடு வேலைகொடு
உழைப்புக்கேற்ற ஊதியம் கொடு' போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான எம். தியாகராசா, செ. மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், முன்னாள் மாகாணசபை உறு;பிபனர் எம்.பி. நடராஜ் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago