2025 ஜூலை 03, வியாழக்கிழமை

துணுக்காயில் உணவுக் களஞ்சியசாலை

George   / 2016 மே 31 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் யு.என்.கபிரட் நிறுவனத்தின் 2.4 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் உணவுக் களஞ்சியம் அமைக்கப்பட்டு வருகின்றது,

மேற்படி பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள கோட்டைக்கட்டியகுளம், புத்துவெட்டுவான் ஆகிய கிராம மக்கள் விவசாயத்தை தங்களின் பிரதான வாழ்வாதாரமாக கொண்டவர்கள். 

இந்த இரண்டு கிராமங்களிலும் வசிக்கும் 200 விவசாய குடும்பங்கள் தங்கள் உற்பத்திகளை சேமிக்க முடியாது சிரமப்பட்டனர்.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதின் அடிப்படையில், யு.என்.கபிரட் நிறுவனத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, களஞ்சியசாலை அமைக்கப்பட்டு வருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .