Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 17 , பி.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
தொண்டமனாறு கடல் நீரேரியினை நம்பி வாழும் மீனவ கிராமங்களில் கரவெட்டி, மத்தொனி மீனவ சமூகம் ஆரம்ப காலத்தில் பெரும் பங்கினை வகித்திருந்தனர்.
ஆனால், தொண்டமானாறு கடல் நீரேரிக்கு குறுக்காக 1953ஆம் ஆண்டு நன்னீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, உவர் நீர் கிராமங்களை ஒட்டிய நீரேரிகளுக்கு செல்வதனை தடுக்கும் முகமாக நீர்ப்பாசன திணைக்களத்தினால் உவர் நீர் தடுப்பணை அமைக்கப்பட்டது.
இதன் பின்னரான ஆறு தசாப்த காலப்பகுதியில், தொண்டமானாறு கடல் நீரேரிக்கு கடல் நீர் உள் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீன்களின் வளர்ச்சி, இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டதால் இப் பகுதி மீனவர்கள் மீன்பிடியில் பாரிய பின்னடைவினை எதிர்கொண்டனர். இச் செயற்பாடு தமது வாழ்வாதாரத்தினையே இல்லாமல் செய்து விட்டதாக இப் பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால், குடும்பப் பொருளாதாரத்தினை கொண்டு செல்வதில் இவர்கள் பெரும் சாவால்களுக்கு உள்ளாவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இதுவரை தங்களுக்கு யாழ். கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் அல்லது தொண்டு நிறுவனங்கள் எந்த வித தொழில் முயற்சிக்கும் உதவிகளை வழங்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக, பூர்வீக மீன்பிடியில் ஈடுபட்ட குடும்பங்களில் உள்ள எதிர்கால சந்ததியினர் வேறு தொழில்களில் ஈடுபடவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து, ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு போதிய உதவிகளை வழங்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
39 minute ago
50 minute ago