Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், திரும்பவும் அவர்களுடன் சேர்ந்து இணங்கிபோவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் எனவே, இது பற்றி எதுவும் சொல்ல முடியவில்லையெனவும் அவர் கூறினார்.
ஆகவே, எந்த இடத்திலும் எவரையும் தான் குற்றம் கூறுவதாக இல்லையெனவும், அவர் கூறினார்.
முஸ்லிம் மக்களிடம் இருந்து நாம் கற்க வேண்டியது பல இருக்கின்றன. அதில் அவர்கள் அனைவரும் கூட்டாக விலகிய ஒற்றுமையும் ஒன்று,
ங்களுக்குள் ஏராளமான பிரச்சினைகள் இருந்தாலும் தங்கள் சமூகத்தை பாதிக்கின்ற விடயம் வருகின்ற போது அவர்கள் ஒன்று சேர்வார்கள்.
இது இங்கு மட்டும் அல்ல, உலகம் முழுக்க காணகூடியதாக இருக்கிறது எனவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழர்களிடையே வேறுவிதமான குணம் காணப்படுகிறது. நாங்கள் மட்டும்தான் விடயங்களை தெரிந்தவர்கள் என்ற வகையில் ஒவ்வொருவரும் நடக்க முற்படுவதனால்தான், எங்களிடையே ஒற்றுமை தடைப்பட்டு இருக்கிறது.
எனவே முஸ்லிம்களின் இந்தச் சம்பவத்தை வைத்துக்கொண்டு தமிழர்கள் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும், என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
12 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
2 hours ago