2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2015 நவம்பர் 01 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி, பூநகரி தெளிகரை ஐம்பது வீட்டுத்திட்டத்தில் வாழும் குடும்பங்கள் தமக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்வதிலும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
 
கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தெளிகரை பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ஐம்பது வீட்டுத்திட்டத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு சொந்தக்காணிகள் இன்றி பூநகரிப்பிரதேசத்தில் வாழ்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள் என பல்வேறு வகைப்பட்ட 50 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன.
 
எனினும், குறித்த குடியிருப்புக்களின் போக்குவரத்து வீதிகள் எவையும் சீர்செய்யப்;படாமல் காணப்படுகின்றது.
 
மின்சார விநியோகமும் மேற்கொள்ளப்படாதுள்ளது.
 
அத்துடன், மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாற்றுத்திறனாளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
 
இக்கிராமத்தில் தொழில் வாய்ப்புக்கள் எவையும் இல்லாத நிலையில் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாகவும் இப்பகுதியில் தும்புத்தொழிற்சாலை அல்லது வேறு கைத்தொழில் தொழிற்சாலைகளை அமைத்து தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .