Freelancer / 2022 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
கிளிநொச்சியில் நகைக்கடை வியாபாரி ஒருவர் வேலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த போது வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதுடன், கடையை திறக்க வைத்து 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் நகைக்கடை வைத்திருக்கும் குறித்த நபர், வியாபார நடவடிக்கைகளை முடித்து நேற்று இரவு வீடு சென்றுகொண்டிருந்த போது பன்னங்கண்டி பகுதியில் வைத்து வானில் வந்தவர்களால் வழிமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு நீண்ட நேரம் வானில் வைத்து தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடைக்கு அழைத்து சென்று கடையை திறக்குமாறு மிரட்டி அங்கிருந்து 10 பவுண் தங்க நகைகளை எடுத்துச் சென்றதுடன், காயங்களுக்கு உள்ளான நபரை அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.
பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் உறவினர்களின் உதவியுடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (R)
13 minute ago
46 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
46 minute ago
48 minute ago
1 hours ago