Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு -மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், நீண்ட நாள்களாக தீர்க்கப்படாதிருந்த காணிப் பிணக்குகளை தீர்க்கும் முகமான நடமாடும் சேவை ஒன்று, இன்று காலை 9 மணி முதல் மாலை வரை, மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 15 கிராம அலுவலர் பிரிவுகளிலும், மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருந்த 13 காணி பிணக்குகள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்கும் முகமாக இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ந.றஞ்சனா தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில், மாகாண காணி ஆணையாளர் பொ.குகநாதன், உதவி காணி ஆணையாளர் கை.மகேஸ்வரன், மாகாண காணி திணைக்கள காணி உத்தியோகத்தர் செ.சண்முகநாதன், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago