Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டச் செயலகத்தில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில், இன்று (31) காலை 10 மணியளவில் நடமாடும் சேவை நடைபெற்றது.
குறித்த நடமாடும் சேவையை வெளிவிவகார அமைச்சர் திலக்மாறப்பன கலந்துகொண்டு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலந்து கொண்டார்.
குறித்த நடமாடும் சேவையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், பதிவாலர் நாயகம் திணைக்களம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட திணைக்களங்களும் நிறுவனங்களும் கலந்துகொண்டது.
குறித்த நடமாடும் சேவையின் போது, தேசிய அடையாள அட்டை வழங்குதல், இந்தியாவில் இருந்து வருகை தந்தவர்களுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்குதல், குடியுரிமைச் சான்றிதழ், கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகள் குறித்த நடமாடும் சேவையூடாக வழங்கப்பட்டது.
மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பயனாளிகளும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
50 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
4 hours ago